Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 6 பேர் கைது

திருச்சி அருகே உள்ள நாகமங்கலத்தை சேர்ந்தவர் ராமராஜன் (34). இவர் ஊர் ஊராக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது மனைவி ஹேமலதா (25). தனது கணவர் ராமராஜன் கடந்த 24 ஆம் தேதி காலை உறவினர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் காணவில்லை எனக் கூறி கடந்த 26ஆம் தேதி மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது ராமராஜன் சென்னை ஆவடி ரங்கநாதன் நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் கீர்த்தி (38) என்பவரிடம் தொழில் செய்வதற்காக ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று இருந்ததும், இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது 

பின்னர்  மணிகண்டம் போலீசார் கீர்த்தியை பிடித்து விசாரித்த போது ராமராஜனிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதாகவும், ஆனால் ராமராஜன் தனக்கு வியாபாரம் இல்லை தொழிலில் நஷ்டம் என கூறி வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இழுத்து அடித்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தி எப்படியாவது ராமராஜன் இடமிருந்து தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தீர வேண்டும் என முடிவு செய்து அவரது நண்பரான செங்கல்பட்டு கடப்பாக்கம் முதல் தெருவை சேர்ந்த அப்துல் கனி மகன் முஸ்தபா (எ ) சலீம் (28) என்பவரிடம் கூறியுள்ளார் அவரும் எனக்கும் பணம் தேவை உள்ளது.

அதனால் ராமராஜன் இடமிருந்து தான் பணத்தை பெற்று தருவதாகவும், அதற்கு நமக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என முஸ்தபா கூறியதாகவும் அதன் அடிப்படையில் முஸ்தபாவுடன் ஜார்க்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ள துப்பாக்கி வாங்கி, பின்னர் முஸ்தபாவின் நண்பர்களான சென்னை சூளைமேடு ஆத்திரை புறம் சேர்ந்த கோபால் மகன் ராஜேஷ் (41), தஞ்சாவூர் ராஜப்பா நகர் செங்காளம்மன் நாச்சியம்மன் தெருவை சேர்ந்த சிவசங்கர் மகன் மணிகண்டன்(34), அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் வசந்த் (24), சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் முதல் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இருதயராஜ் (43) ஆகிய 5 பேர் மற்றும்

கீர்த்தி என ஆறு பேரும் சேர்ந்து ராமராஜனை கடத்தி சென்று கொடுத்த பணத்தை வசூலிப்பது என முடிவு செய்ததாகவும் அதன் அடிப்படையில் ராமராஜனை கடந்த 24ம் தேதி காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு அடைந்து வைத்து மிரட்டி வருவதாக கூறியுள்ளான். இதன் அடிப்படையில் மணிகண்டன் போலீசார் முஸ்தபா உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்ததோடு ராமராஜனையும் மீட்டதோடு மேலும் முஸ்தபாவிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 6 பேரிடம் தொடர்ந்து மணிகண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *