65 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் - மளிகை கடை சீல்
பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, காமராஜர் ரோடு மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் N. சுடலைமணி த/பெ நாராயணபெருமாள் நடத்தி வரும் N. S மளிகையில் ஆய்வு செய்யப்பட்டது.
மேற்கண்ட ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 65 கிலோ இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்யபட்டு வழக்கு போடுவதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.
மேலும் பறிமுதல் செய்யபட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், சுடலைமனி என்பவரையும் மேல்நடவடிக்கைக்காக திருச்சிராப்பள்ளி மாநகர பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய திரு. கந்தவேல், இப்ராஹிம், மகாதேவன் ஆகியோரும் உடனிருந்தனர்.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு அவர்கள் கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.
மாவட்ட புகார் எண் 96 26 83 95 95. மாநில புகார் எண் 94 44 04 23 22
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision