இயற்கை உரம் கொண்டு விளைவித்த சின்ன வெங்காயம் கிலோ 80 - திருச்சி மத்திய சிறை அங்காடியில் விற்பனை!!

இயற்கை உரம் கொண்டு விளைவித்த சின்ன வெங்காயம் கிலோ 80 - திருச்சி மத்திய சிறை அங்காடியில் விற்பனை!!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறிய தோட்டம் 2ல் காய்கறிகள், மா, பலா, வாழை ஆகியவை சிறைவாசிகளால் பயிரிடப்படுகிறது. இவைகள் பொதுமக்களின் நலன் கருதியும், சிறைவாசிகளின் வாழ்விற்காகவும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisement

ஒவ்வொரு வருடமும் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டு அவை பொதுமக்களுக்காக விற்பனை வினியோகம் செய்யப்பட்டு செய்யப்படுவது வழக்கம். அதுபோல் தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு பொதுமக்களுடைய விற்பனைக்காக சிறை அங்காடியில் விற்கப்பட்டு வருகிறது.

Advertisement

ஆர்கானிக் முறையில், மண்புழு உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தி செயற்கை அல்லாமல் பூச்சிக்கொல்லிகள் மருந்து இல்லாமல் இயற்கையான முறையில் முற்றிலும் இந்த சின்ன வெங்காயம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்ட 300 கிலோ வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு விற்கப்படும் சின்ன வெங்காயம் 1 கிலோ 80 ரூபாய். இதனை வழக்கம் போல பொதுமக்களும், சிறை குடியிருப்பில் உள்ள பணியாளர்கள் குடும்பத்தினரும் பலர் தங்களது இளைஞர்களுக்கு வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். 

பொதுமக்களுக்கு நல்ல காய்கறிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பயிரிட்டு வருகிறது. மேலும் தரமான காய்கறிகள் விளைவிக்கும் சிறைவாசிகள் வாழ்வாதாரத்துக்கு மேம்படுத்தும் வகையில் விற்பனை வரும் தொகையை சிறைவாசிகளுக்கு அளிக்கபட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS