திருச்சி மாவட்டம் காவல் துறை சார்பாக, “பசுமைத் திருச்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்தது” என்ற நோக்கத்தின் கீழ் திருச்சி மாவட்ட காவ காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் சீரிய முயற்சியின் கீழ் Xerox பேப்பர் தட்டுப்பாட்டை குறைக்க கடந்த வருடம் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் தேவையில்லாத காகிதங்கள் எடை போட்டு மாவட்ட ஆயுதப்படையில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதத்தாள்கள் என மொத்தமாக 21 மெட்ரிக் டன் மற்றும் 220 கிலோ சேகரிக்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட பழைய காகிதங்களை புகழூர் காகித ஆலைக்கு அனுப்பி, அதற்கு பதிலாக Xerox பேப்பர் பண்டல்கள் வாங்குவதற்கு அங்குள்ள அதிகாரிகளிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசி பழைய காகிதங்களையும் ஆலையில் ஒப்படைத்து, அதன் எடை மதிப்பிற்கு ஏற்றவாறு 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டு அவரவர் கொடுத்த பழைய காகிதத்திற்கு ஏற்றார் போல் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

அதேபோல், இரண்டாவது முறையாக இந்த வருடமும் பசுமைத் திருச்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்தது’ என்ற நோக்கத்தின் கீழ் கடந்த ஒரு வாரமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய காகிதங்களும், பதிவேடுகளும் சேகரிக்கப்பட்டு கடந்த (17.04.2026) அன்று கரூர் மாவட்டத்திலுள்ள புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) அனுப்பி அதன் எடை மதிப்பிற்கு ஏற்றவாறு 860 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டு அவரவர் கொடுத்த பழைய காகிதத்திற்கு ஏற்றார் போல் அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள்களில் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

இது போல இனிவரும் காலத்திலும் இதே நடைமுறை பின்பற்றபடும் என்றும், இதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரங்களை வெட்டுவதைக் குறைக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இம்முறை வசதியாக இருக்கும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments