திருச்சியை சேர்ந்த 92 வயது முதியவர் மரணம் - கண் மற்றும் உடல் தானம் செய்த குடும்பத்தினர்

திருச்சியை சேர்ந்த 92 வயது முதியவர் மரணம் - கண் மற்றும் உடல் தானம் செய்த குடும்பத்தினர்

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சேர்ந்த ராமசாமி 92 இவரது மனைவி கோமதி இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் ,இவர் தபால் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது திராவிட கழகத்தின் நம்பர் ஒன் டோல்கேட் பகுதி தலைவராக பதவி வகித்து வந்தார் .

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று ராமசாமி இயற்கை எய்தினார் ,உடனடியாக அவர்களது குடும்பத்தினர் ராமசாமியின் கண்களை தானமாக அளிக்க முன்வந்து தனியார் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு ராமசாமியின் கண்கள் தானம் செய்யப்பட்டது .

மேலும் கி ஆ பே விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக உதவும் வகையில் அவரது உடலை தானமாக கொடுக்க அவரது குடும்பத்தினர் முன்வந்து இன்று அவரது உடலை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் .

முன்னதாக அவரது இல்லத்தில் இருந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பழனி வேல் மற்றும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அஞ்சலி செலுத் தினர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision