திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதிகளான பூனாம் பாளையம், ராசாம்பாளையம், அய்யம்பாளையம் பகுதிகளில் செல்போன் மூலம் நம்பர் போட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிருந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை செய்ததில் ராசாம்பாளையம் சேவாப்பண்னையைச் சேர்ந்த 34 வயதான குமார், ராசாம்பாளையம் தெற்கு சாலக்காடு பகுதியை சேர்ந்த 52 வயதான தங்கராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 41 வயதான பெரியண்ணன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் செல்போன் மூலம் நம்பர் போட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன் மற்றும் ரூபாய் 4,500 பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தி துறையூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments