ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து திருநாளில் எட்டாம் திருநாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்தது. இதையொட்டி நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள மணல்வெளிப் பகுதியில் நம்பெருமாள் வையாளி நடந்தது.
 ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை மணல்வெளியில் எல்லா திசைகளிலும் சென்று (மக்களின் தீவினைகளை) வேட்டையாடுவது போல பாவனை செய்தனர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக இந்த வையாளி வைபவம் நடந்ததை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்தனர்.

 இதையடுத்து ஆன்மீகம் மற்றும் அறப்பணிகளுக்காக கொள்ளையில் ஈடுபட்டுவரும் திருமங்கை மன்னனை திருத்தி ஆட்கொண்டருளும் பொருட்டு, நம்பெருமாளின் நகைகள் மற்றும் தங்க வெள்ளி பாத்திரங்களை திருமங்கை மன்னன் அவரைச் சேர்ந்தோர் கொள்ளையடித்துச் செல்லும் காட்சி அரங்கேறியது. இறைவனிடமே கொள்ளையடித்ததை உணர்ந்து திருமங்கைமன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபவமும் நடந்தது.

இதைத் தொடர்ந்து நம்பெருமாள் மன்னனை மன்னித்து ஆழ்வார்களில் ஒருவராக திருமங்கையாழ்வாராக ஏற்றுக் கொண்டார் என்பது ஐதீகம். இந்த உற்சவ நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற (24.12.2021)தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           169
169                           
 
 22 December, 2021
 22 December, 2021

Comments