பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது….. திருச்சியில் கூடியுள்ள கூட்டம் சரித்திரம் வாய்ந்த பொதுக்கூட்டம்.2024ல் தமிழகத்தில் 25 எம்பிகள் கொண்டு வருவோம் என்று சொல்லி வருகிறோம் ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் 39 எம்பிகள் வருவார்கள்.
திமுக சொல்வது திராவிட மாடல் என்பது கபட நாடகம். திமுக ஆட்சியில்
லஞ்சம்,கொலை,கொள்ளை,என தமிழகம் பின்னோக்கி ஓடுவதில் தான் நம்பர்.1 திமுக ஆட்சி சாதாரணமான மக்களுக்கு எதிரானது.திமுக சாதி பின்புலத்தில் அரசியல் செய்கிறது என்றார். ஹிந்தி கற்றால் பானிபூரிகாரனாக மாறுவோம் என திமுக கீழ்தரமான சிந்தனை கொண்டுள்ளது. தமிழகத்தில்  முதல்வர்,நிதியமைச்சர் வாய்க்கு வந்தது எல்லாம் ஜி.எஸ்.டி விவகாரத்தில் பேசுகிறார்கள். திராவிட மாடல் அரசு னு பேசும் அமைச்சர்களுக்கு கூட ஜி.எஸ்.டி பற்றி தெரியாது.எல்லாவற்றிக்கும் எதற்க்கு எடுத்தாலும் 21 முறை திராவிட மாடல் அரசுனு முதல்வர் சொல்லியுள்ளார்.
மேலும் பேசிய அவர் மதுரை ஆதீனம் மீது கை வைத்து பாருங்கள். அமைச்சர் சேகர் பாபு மிரட்டி பேசி வருகிறார். பிரதமர் மதுரையில் ஆதீனத்திடம் தனியாக பேசியுள்ளார். அப்படி இருந்தும் ஆதீனத்தை மிரட்டுகிறீர்களா. ஆதீனத்தை தப்பி தவறி தொட்டு விடாதீர்கள் விபரீதம் மோசமாக இருக்கும் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தார். தற்போது சிதம்பரம் கோயில் விவகாரத்திலும் தலையிடுகிறார் அமைச்சர் சேகர் பாபு. சன்னியாசிகளை தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்கள் அவர்களது வேலை செய்யட்டும் என கேட்டு கொண்டார். அனைத்து துறைகளிலும் கொள்ளை திராவிட மாடல் திமுக அரசு. ஆவின் (சத்து பொருட்கள் தொகுப்பு), ஜிகொயர், ஸ்பிரிங்க மினரல் வாட்டார் என எல்லாவற்றிலும் திமுக குடும்பத்தினர் ஆதிக்கம்.
ஆவணங்களை எடுத்து பார்த்தால் தெரியும் என குறிப்பிட்டார். கச்சதீவு பற்றி பேச முதல்வருக்கு முகாந்திரமே கிடையாது. அமைச்சர் அன்பரசன் பொறுக்கி என என்னை சொல்வது உண்மை. ஊழல்களை பொறுக்கி பொறுக்கி எடுத்து கூறுபவன் அண்ணாமலை என தெரிவித்தார். இந்தியாவில் 2024 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 450க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும். திருச்சியில் தேசியமும், ஆன்மீகமும் கொண்ட  பாஜக எம்பி வர வேண்டும் என பேசினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO


            
            
            
            
            
            
            
            
            
            


Comments