Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் வெறும் மூன்றே நாட்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டின் இலக்கு 1 கோடி மரங்கள் நடுவது. அதில் தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியை ஈஷா வேளாண் காடுகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 37 மாவட்டங்களில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர். இதன்மூலம், சுமார் 165 விவசாயிகளின் நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடப்படுகிறது.

மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை ஈஷா நாற்றுப் பண்ணை மூலம் 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களின் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்

இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குருவால் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் சோபனபுரம், M.களத்துர், செவந்திபட்டி, R .கோம்பை, திருபட்டூர், தாதம்பட்டி, கோவில்பட்டி, அரசுநிலைபாளையம், தாதம்மலைபட்டி, போன்ற கிராமங்களில் 30 ஏக்கர் விவசாய நிலங்களில் சுமார் 13,500 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *