திருச்சி – கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார் பாளையத்தில் இளைப்பாறிய போது, இறைவன் கனவில் தோன்றி கோவில்அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோவில் கட்டியதாகவும், அதனையடுத்து கல்லணை கட்டப்பட்டதாகவும் வரலாறு.
இத்தகைய சிறப்புவாய்ந்ததும், திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோயிலின் சார்புகோவிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது. வருடத்தில் வேறு எந்தநாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாகபடும். இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பலநற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் ஆவணி மாதம் 7ம் நாளான இன்று (23ம்தேதி) காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சூரியக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து காசிவிஸ்வநாதர் மூலவரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்யும். அப்போது மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் தங்க சிலை போல காட்சியளித்தார்.
இந்த சூரியவழிபாடு பூஜை தொடர்ந்து அதனையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காசிவிஸ்வநாதருக்கு  மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திருச்சி மற்றும் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து பக்தியுடன் வழிபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments