இருப்புப் பாதை காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா, காவல் துறை தலைவர் திஷித் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மற்றும் இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் திருச்சி ரயில் நிலையம் மற்றும் ரயில் வண்டிகளில் தொடர்ந்து கொள்ளை வழிப்பறி, திருட்டு, கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுரைகள் வழங்கி உள்ளார்கள்.
அதன்படி19.082022 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா தேவர் மகன் மாயக்கண்ணன் என்கின்ற அமரன் (32) என்பவர் ரயில்களில் தொடர் திருட்டு செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டதை கண்காணித்து அவரை கைது செய்தும் அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள் மற்றும் லேப்டாப் செல்போன் (மொத்த மதிப்பு 2 லட்சத்து 17 ஆயிரம்) ஆகியவற்றை திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் கைப்பற்றிஎதிரி மாயகண்ணனை விசாரித்த போது இதற்கு முன்பு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேற்படி குற்றங்களை தடுக்கும் நோக்கில் திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மற்றும் திருச்சி மாநகரம் தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர்களின் பரிந்துரைப்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாயக்கண்ணனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள மாயக்கண்ணன் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதி வீரபாண்டியன் ஆகியோர்கள் இதுபோன்று ரயில்களில் பொதுமக்களிடம் மிரட்டி தாலி செயின் பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபடும் இது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments