
Advertisement
திருச்சி தென்னூர் வாமடத்தில் சப்பாணி- செல்வி ஆகியோரின் மகன் விஜய் என்கிற வாழக்காய் விஜய்(19) நேற்று 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டியும், குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
இந்த வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டனர். இந்நிலையில் குற்றச் செயலில் ஈடுபட்ட சோமரசம்பேட்டை சேர்ந்த பிரவீன் காந்த்(20), வாமடத்தை சேர்ந்த குணசேகரன்(25), ஜீவா நகரை சேர்ந்த பிரதாப்(22), கார்த்திக் (20), நிஷாந்த்(21), வா மடத்தை சேர்ந்த சிவபிரகாஷ் (19) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான ஜீவா நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் (40) என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த ஜெயச்சந்திரன் மீது மாநகர காவல்நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           128
128                           
 
 
 
 
 
 
 
 

 09 November, 2020
 09 November, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments