தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் திருச்சி மாநகரில் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
தென்னூர் அண்ணாதெரு, ஜீவா நகரில் பாண்டியன் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் சுமார் 40 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர் பாண்டியனை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் முதல் ஆய்வில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் குட்கா பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments