திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் 100 அடி சாலை மளிகை நகர் பகுதியில் உள்ள பைரவருக்கு புதிதாக கோவில் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
முன்னதாக வாஸ்து பூஜை உடன் தொடங்கியது. இதில் முதன்மையாக கணபதி பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. யாகத்தில் நவதானியம், பலன்கள், மற்றும் யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் யாகத்தில் போடப்பட்டன.
இந்த பூமி பூஜா விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திருவடி குடில் சுவாமிகள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments