திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல்களை அள்ளி சேமிப்பு கிடங்கில் வைத்து அதில் இருந்து திருச்சி திருவெறும்பூர் மற்றும் லால்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு மணல் குவாரியில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மணல் குவாரியில் மணல்களை கொள்முதல் செய்ய தினசரி காலை 7:00 மணி முதல் செயல்படுவது வழக்கம். ஆனால் இன்று மணல் குவாரியில் செயல்படும் அலுவலர்கள் திடீரென்று இன்று காலை மணலை கொள்முதல் செய்ய அனுமதி சீட்டு வழங்க மறுத்ததுடன் இனிவரும் காலங்களில் தினசரி காலை 10 மணி முதல் மணல் குவாரி செயல்படும் என அறிவித்ததால் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மணல் தொழிலாளர்கள் மணல் குவாரியிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் பழைய நடைமுறையான காலை ஏழு மணி முதல் மணல் குவாரி செயல்பட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததின் பேரில் போராட்டத்தினை கைவிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments