ராமநாதபுரம் மாவட்டம், விளக்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூவலிங்கம். செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வரும் இவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூர் கிராம பகுதியில் வயல் காட்டில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்புள்ள 25 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments