திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 800 மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்து அனைத்து வகுப்பு அறைகள், தலைமை ஆசிரியர் அறையையும், வெளி கேட்டையும், தலைமை ஆசிரியர் ஹேமா பூட்டி சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு பள்ளி வளாகத்தில் நுழைந்த மர்ம நபர் பள்ளியின் வெளிக்கேட்டை இரும்பு கம்பியை கொண்டு உடைத்து உள்ளே சென்று தலைமை ஆசிரியை அருகில் இருந்த எல்சிடி டிவி உடைத்துள்ளார்,
மேலும் பள்ளியின் கூட்ட அரங்கிற்காக புதிய கட்டிடம் கட்ட வசூல் செ ய்து பீரோவில்வைத்திருந்த 3 லட்சத்தை மர்ம நபர் பீரோவை திருடி சென்று உள்ளார். இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் அறை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு பள்ளியின் வெளிவளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடி கேமரா பதிவில் பதிவான காட்சிகளை கொண்டு பள்ளியில் திருடிய நபரை தேடி வருகின்றனர். பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் திருடு போனது ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments