திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலுரை சேர்ந்தவர் பிரேம்குமார் (24). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தஞ்சை மாவட்டம் புது குடியை சேர்ந்த நிர்மலா (24) என்ற பெண்ணுக்கும் 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது.
இந்த நிலையில் இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிர்மலா நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். கடந்த 23ஆம் தேதி மீண்டும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியில் சென்ற நிர்மலா வீடு திரும்பவில்லை. பிரேம்குமார் நிர்மலாவை அவரது உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் நிர்மலா கிடைக்கவில்லை.
மேலும் நிர்மலாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போது செல்போன் அனைத்து வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பிரேம்குமார் நாவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன புது மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments