திருச்சி E.B.ரோடு 33/11KV துணை மின் நிலையத்தில் (02.12.2023) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், வெல்லமண்டி ரோடு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி(ஒரு பகுதி), மதுரம் மைதானம், பாரதியார் தெரு. பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் (02.12.2023) (சனிக்கிழமை) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம், செயற்பொறியாளர் பொறிஞர்.பா.சண்முக சுந்தரம், தெரிவித்துள்ளார். மேலும் மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருச்சி மாவட்டம் முசிறி துணை மின் நிலையத்தில் 110 கி.வோ. கட்டமைப்பில் நாளை (02.12.2023) அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. இதனால் முசிறி, சிங்காரசோலை, பார்வதிபுரம், பேருந்துநிலையம், கைகாட்டி, சந்தபாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன்காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைப்புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி. தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (02.12.2023) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், முசிறி செயற்பொறியாளர் பொறிஞர். பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைக்கருகில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்கிட உதவிடுமாறும் மற்றும் மின்சாரத்தை தேவையான சமயத்தில் சிக்கனமாக உபயோகிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

110/33-11 கி.வோ அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (02.12.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அரியமங்கலம், இராணுவ காலனி, பாலாஜி நகர், காட்டூர், SIT, பாப்பாக்குறிச்சி மேலகல்களண்டார்க்கோட்டை, திருநகர், அம்பிகாபுரம், கைலாஷ் நகர், கீழகல்கண்டார்க்கோட்டை, நத்தமாடிப்பட்டி, ரயில் நகர், சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், கீழக்குறிச்சி, நேருஜி நகர், ராஜப்பா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்தூர், காமராஜ் நகர், எம்.ஜி.ஆர் நகர், அடைக்கல அள்னை நகர், பொன்மலை, மலையப்ப நகர், சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம் இன்டஸ்ரியல், செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை (02.12.2023) சனிக்கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments