திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டியில் ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ஆலயத்தில் விளக்கேற்ற வந்த பூசாரி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை தணிக்கை செய்தபோது அதில், மர்மநபர் ஒருவர் மாலையில் கோயிலுக்குள் நுழைந்து உண்டியல் அருகிலிருந்த சூலத்தை பெயர்த்து எடுத்து அதன் மூலம் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கைகளை திருடுவது பதிவாகியிருந்தது. இத்திருட்டு சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments