Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ஜனவரியில் திறப்பு

திருச்சியில் பல்வேறு திட்டப்பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. மொத்தம் 350 கோடி ரூபாய் செலவில் இந்த பேருந்து முனையம் 159 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில் சுமார் 77 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பேருந்து நிறுத்துமிடம் நான்கிலும் சுமார் 404 பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தரைத்தளம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுத்திக்குள் தரைத்தளத்துடன் முதல் தளத்தை அமைக்கும் பணியானது நிறைவடையும். முதல் தளம் உள்ளூர் பேருந்துகளுக்காகவும், தரைத்தளம் வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்படும். இந்த இரண்டு தளங்களும் 2 எஸ்கலேட்டர் மற்றும் 3 எலிவேட்டர்களை கொண்டதாக கட்டப்படுகிறது. ஒரேநேரத்தில் 820 பயணிகள் அமரும் வகையில் இது கட்டப்பட்டு வருகிறது. 404 பேருந்துகளை தவிர 124 இடங்கள் உடனடியாக வெளியே செல்வதற்கு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 142 பேருந்து நிறுத்தங்கள் நீண்ட தூர பயண பேருந்துகள் நிறுத்துவதற்கும், 78 பேருந்து நிறுத்தங்கள் குறுகிய தூர பயணத்திற்கு செல்லும் பேருந்துகளுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. நகரப்பேருந்துகள் 60 இடங்களில் நிற்கும். இந்த பேருந்து முனையத்தில் முதலில் ஒரு பகுதியை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதுவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருமாதத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். மின்சார பணிகள் அழகுப்படுத்தும் பணிகள் மீதமுள்ளன. அதுவும் விரைந்து நடைபெறும். மொத்தம் 118 கடைகள் 3 ஓட்டல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *