Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிபிஐ தேசியச் செயலாளர் கானம் ராஜேந்திரன் மறைவுக்கு திருச்சியில் மௌன அஞ்சலி!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், கேரள மாநில செயலாளருமான தோழர் கானம் ராஜேந்திரன் நேற்று முன் தினம் இயற்கை எய்தினார். இதையடுத்து திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் எஸ்.சிவா தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஏஐடியுசி தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் த.அறம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்டப் பொருளாளர் சொக்கி.சண்முகம், பகுதி குழு செயலாளர்கள் ஏ.அஞ்சுகம், எஸ். சையது அபுதாஹிர், எம்.ஆர்.முருகன், மாணவர் பெருமன்ற மாநிலப் பொருளாளர் க.இப்ராகிம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.செல்வகுமார், ஏஐடியுசி போக்குவரத்து மாவட்ட செயலாளர் எம் .சுப்பிரமணி, கலை இலக்கியப் பெருமன்ற புறநகர் மாவட்ட செயலாளர் லெனின், ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சூர்யா, புறநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ்,

மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சுமதி, மற்றும் கிளைச் செயலாளர் அன்பழகன், அசோக், ஜி ஆர் சரவணன், கேகே முருகேசன், ஜெயக்குமார், முருகன், துரைராஜ், கவியரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *