Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

IOCLல் 1603 பணியிடங்களுக்கு வாய்ப்பு

டெக்னீசியன், கிராஜுவேட் மற்றும் டிரேட் அப்ரெண்டிஸ்கள், டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பணிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ளது ஐ.ஓ.சி.எல். தமிழ்நாடு & புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, மேற்கு வங்காளம், பீகார், உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல இடங்களில் பணி நியமனங்கள் நடைபெறும். ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம், சிக்கிம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், திரிபுரா, நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகியவற்றிலும் நியமிக்கப்படலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ஐஓசிஎல்) அப்ரண்டிஸ் சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் / 15 மாதங்கள் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி பெறுவதற்கான காலியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் (கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்க்கவும்). வேலை தேடுபவர்களின் நலன் கருதி தகவல் நோக்கங்களுக்காக தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள், உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 05 வருடங்களும், OBC க்கு 03 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் படைவீரர் & மற்றவர்கள், ஏதேனும் இருந்தால் – அரசின் கொள்கைப்படி நியமனக்கள் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு : எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.iocl, தேர்வு/நேர்காணலுக்கான சரியான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் நிர்வாகத்தினராம் தெரிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *