திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சொகுசு காரை ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அந்தக் காரில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரிய வந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை ராஜஸ்தானில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 62 மூட்டைகள் இருந்தன. மேலும் ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் (23) என்பவரை கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்த மூன்று லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் (சொகுசு கார்) கிரீட்டா காரையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து குட்கா பொருள்களை கடத்தி வந்த சுனில் குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments