வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் மும்மரம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் தங்களது மனக்குமுறல்களை சுவரொட்டி மட்டும் விளம்பர பதாகை மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முசிறி வெள்ளூர் பகுதி பொதுமக்கள் சார்பில் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளூர் ஊராட்சி சார்ந்த ஏழாவது வார்டு மேல வெள்ளூர் கிராமத்தில் கடந்த 12 வருடங்களாக சாலைகள் சீரமைப்பு மற்றும் போதிய அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால் கிராம மக்கள் அனைவரும் முசிறி தொகுதி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உனக்கான அரசியலை நீ பேசவில்லை எனில் நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய் என வாசகத்துடன் பிளக்ஸ் வைத்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னே தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முசிறி தொகுதி வெள்ளூர் ஊராட்சி மக்கள் பிளக்ஸ் வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments