பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா, பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள L.A சினிமாஸ் திரையரங்கில் இந்த திரைப்படம் இன்று வெளியானது.
திரைப்படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் சிலர் தங்கலான் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்கிற்கு வந்திருந்தனர். அவர்களிடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் LA சினிமா நிர்வாகம் சார்பாக மேலாடை இன்றி உள்ளே வரக்கூடாது என அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மேலாடை அணிந்த பின்பு திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments