உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப் பெற்று வருகிறது.

“திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் (2024-25) ஆம் ஆண்டிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்,

திருக்குறளில் இயல் எண், அதிகாரம், குறள் எண். குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கொள்ளப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும்.

ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது. திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்திலோ (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431-2401031 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ, மாணவியர் (15.10.2024) ஆம் நாளுக்குள் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 02 September, 2024
 02 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments