திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பணியாற்றி வரும் இரு தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் (தீனா -நியூஸ் தமிழ், வினோத் – தந்தி) இன்று வாத்தலை பகுதியில் பிரத்யேக செய்தி சேகரிக்க சென்றனர்.

அதில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே வாத்தலை முட்செடிகள் உள்ள பகுதியில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இரு செய்தியாளர்களும் அங்கே இருந்து புறப்பட்டு திருப்பைஞ்சீலி பகுதியில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகிய மணவாளம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

இவர்களை வழிமறித்த ஐந்துக்கும் மேற்பட்டோர் செய்தியாளர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். செல்போன்களை உடைத்தும், மற்றொரு செய்தியாளரின் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். வீடியோ கேமராவை பறிக்க முயற்சி செய்த பொழுது அதனை அவர்களிடமிருந்து காப்பாற்ற மற்றொரு செய்தியாளர் பெரும் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இரு செய்தியாளர்களும் தற்பொழுது திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments