எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து கடந்த (17.09.2024)-ம் தேதி அன்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சேர்ந்த MLA சஞ்சய் கெயிக்வாட் ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11,00,000/- லட்சம் பரிசு வழங்குவேன் என்று கொலைமிரட்டல் விடுத்து தேசிய விரோதி என்றும் தரக்குறைவாக பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ராகுல்தான் நாட்டின் முதல் தீவிரவாதி என்று வெறுப்புணர்வை தூண்டும் வகையில் விமர்சனம் செய்த இரயில்வேதுறை இணை அமைச்சர் ரவிநீத்சிங் பிட்டு மீதும், கடந்த (11.09.2024)-ம் தேதி அன்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் தர்பேந்திரசிங் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது ராகுல்காந்தி, அவரது பாட்டி இந்திராகாந்தி எவ்வாறு கொல்லப்பட்டாரோ அவ்வாறே கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏற்கனவே பிரதமரை பற்றி பேசிய போது ராகுல் காந்திக்கு வழக்கு தொடுக்கப்பட்டது. தற்பொழுது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில பொதுச் செயலாளர் சரவணன் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments