Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

திருச்சி, பட்டர்வொர்த் ரோடு, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – சிவரஞ்சனி தம்பதி.
கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு பிரித்வி அஜய் (12) என்ற மகன் இருந்தான்.

பிரித்தி அஜய் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் தனது வீட்டருகே நண்பர்களுடன் ஒடி விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒயர் எதிர்பாராத விதமாக இச்சிறுவன் மீது படவே சம்பவ இடத்திலேயே உடல்கருகி இறந்து விட்டான்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் மின் கம்பங்களில் மின்சாரவாரிய ஊழியர்கள் மின்விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது மின் வயர்களை தொங்கும் நிலையில் அபாயகரமாக நிலையில் விட்டு சென்றதால் சிறுவன் மின்சாரம் தாக்கி  இறந்தாக சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு  சிறுவனின் இறப்புக்கு காரணமான மின்சார ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய…

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *