திருச்சியில் பழைய ரயில் கோச் உணவகமாக மாற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டிற்காக நேற்று திறக்கப்பட்டது. ரயில்வே சந்திப்பு அருகில் ரயில்வே அருங்காட்சியகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்வே கோச் உணவகம் கோட்ட ரயில்வே மேலாளரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மறுசுழற்சி-மறுபயன்பாடு-புதுப்பித்தல் (Recycle – Reuse – Renew ) என்ற கருத்தினை அடிப்படையாக கொண்டு பயன்பாட்டில் இல்லாத ரயில் கோச்சை உணவகமாக மாற்றியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட உணவகமாக மாற்றும் பணியில், ரயில் கோச்சை செட் செய்வதற்காக 30 அடியில் கான்க்ரீட் தளம் போடப்பட்டு, கோச் உள்ளேயும், வெளியேவும் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் இதுபோன்ற ரயில் கோச் உணவகம் அமைக்கப்பட்டது, அதன்பின் மேற்கு வங்கம், சென்னை என இதுபோன்ற உணவகங்கள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது திருச்சியிலும் இதுபோன்ற உணவகம் அமைக்கப்பட்டதுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. தற்போது சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த உணவகம், ஐந்து வருடங்களுக்கு பின்பு ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           11
11                           
 
 
 
 
 
 
 
 

 04 October, 2024
 04 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments