திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. உறையூர் குறத்தெரு அருகே தொடங்கிய பாதயாத்திரை அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர்….. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகி உள்ளது. ராகுல் காந்தி அரசை விமர்சனம் செய்தால் அவர் இந்தியாவை விமர்சனம் செய்வதாக பாஜகவினர் திசை திருப்புகின்றனர்.

இந்தியாவை பற்றி விமர்சனம் செய்வது வேறு அரசை விமர்சனம் செய்வது வேறு இரண்டும் ஒன்றாகாது. குறிப்பிட்ட மதம் மொழிக்கான அரசாங்கம் போல பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பவன் கல்யாண் திடீர் பிள்ளையார் போல் கட்சி தொடங்கினார். அதிர்ஷ்டவசமாக அவர் வெற்றியும் பெற்றுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் பெருந்தன்மையால் அவர் துணை முதல் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு பவன் கல்யாண் தேசிய அளவில் பெரிய தலைவர் ஒன்றும் அல்ல. அதனால்தான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவரின் கருத்தை புறந்தள்ளிவிட்டு போய்விட்டார். ஆர் எஸ் எஸ் பயிற்சி வகுப்புகள் அனுமதியோடு நடக்கிறதா சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறதா என கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. சில இடங்களில் அனுமதி மறுத்தாலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்து விடுகிறார்கள் அதனால் அரசுக்கு அவர்களுக்கு அனுமதி தர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

நடிகர் விஜய் நடத்தும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையில்தான் உள்ளது. கட்சி தொடங்கும் எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. கட்சி தொடங்கும் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்றும் கூற முடியாது எல்லோரும் வெற்றியடைவார்கள் என கூற முடியாது. மக்கள் தான் அதை முடிவு செய்வார்கள். அவருக்கு தற்பொழுது வாழ்த்துக்கள் தான் கூற வேண்டும்.

புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர். அவர் அவரின் கட்சியினர் எல்லோரையும் மாநாட்டிற்கு வாருங்கள் என்று தான் அழைப்பார் வீட்டில் தூங்குங்கள் என கூற மாட்டார் அவர் அழைப்பதை தவறு என்று கூற முடியாது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           6
6                           
 
 
 
 
 
 
 
 

 05 October, 2024
 05 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments