திருச்சி துவாக்குடி திருவெறும்பூர் ஐடிஐ பார் மற்றும் அண்ணா வளைவு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரியில் இன்று காலை மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்திவிட்டு அங்கு படிக்க கூடிய மாணவர்கள் மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.

அவர்களை தட்டிக்கேட்க சென்ற மாணவர் சங்க கிளை துணை செயலாளர் துளசிராம், மாவட்ட தலைவர் வைரவளவனை தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட நிலையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜி.கே.மோகன் தொடர்பு கொண்டுபுகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து துவாக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் ரஞ்சித், ராஜன், கார்த்தி ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

மாணவர் சங்கத்தினரின் புகாரின் அடிப்படையில் போதை ஆசாமி 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய திருவெறும்பூர் DSP ஜாபர் சித்திக் உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments