திருச்சி மாவட்டம் முசிறியில் எம் ஐ டி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது இதில் எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி எம் ஐ டி போதி வித்யாலயா மற்றும் வெள்ளாளப்பட்டியில் எம் ஐ டி வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது.

இந்நிறுவனங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமையின் கீழ் இயங்கும் சுவாமி ஐயப்பன் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் நேற்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுதும் சோதனை நடைபெற்று வருகிறது. இது வழக்கமான ஒன்று என்று கூறினாலும், வருமானவரி சோதனை என்பது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. திருச்சி வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருவதால் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           120
120                           
 
 
 
 
 
 
 
 

 24 October, 2024
 24 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments