திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று மதியம் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகள் அமைப்பதற்காக உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெறுவதற்காக லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

அப்போது மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தில் இருந்த சீருடையில் ரூ.97 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments