Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி எடுத்துச் சென்ற அவலம்

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்டது நேரு நகர் இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர்.

இந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக உப்பாற்றை கடந்து சென்று இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த உப்பாற்றில் மழைக்காலத்தில் அதிக அளவு காட்டாற்று வெள்ள நீர் செல்லும் அப்போது இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர் இதனால் உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்ட வடகிழக்கு பருவமழையின் காரணமாக உப்பாற்றில் அதிகளவு காட்டாற்று வெள்ளம் செல்கிறது. இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தில் அருணாச்சலம் என்ற 98 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

அவரது உறவினர்கள் அவரது இறுதிச்சடங்கிற்க்காக மயானத்திற்கு கொண்டு செல்லும் பொழுது ஆற்றில் இருந்த தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது தொடர்ந்து மயானத்திற்கு ஆற்றில் இறந்தவரின் உடலை எடுத்துக்கொண்டு தண்ணீரில் மூழ்கிய படி இறந்தவரின் உறவினர்கள் எடுத்துச் சென்று அவருக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்….. மயானத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இறந்தவரின் உடலை ஆபத்தை உணராமல் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி எடுத்துச் சென்ற செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இறந்தவரின் உடலை தகனம் செய்ய தண்ணீரில் மூழ்கி எடுத்துச் செல்லும் அவலம் லால்குடி அருகே அரங்கேறியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *