திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் துறையூரின் பெரிய ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

பச்சைமலையில் பெய்த மழையின் காரணமாக அங்கிருந்து இந்த பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து வருகிறது. 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு வருடமாக இந்த ஏரி நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

284 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் 62.8மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். பச்சமலை மலைப்பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதி மூலம் பச்சைமலையின் அடிவாரத்தில் உள்ள மருவத்தூர் மற்றும் கீரம்பூர் ஏரி நிரம்பி வெளியேறும் நீர் மூலம் இந்த ஏரி நிரம்புகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments