திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு குறிப்பாக தெற்காசிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடர்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து உள்நாட்டு சேவைகளும் அதிகரிக்க உள்ள சூழ்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் திருச்சி – சென்னை மற்றும் திருச்சி – ஹைதராபாத் வழித்தடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தன்னுடைய விமான சேவையை விரிவுபடுத்த உள்ளது.

உள்நாட்டு விமான சேவை மூலம் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த பல முக்கியமான நகரங்களை இணைக்கும் வழித்தடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments