அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் டாப் செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் “சிறகை விரி உயர பற” தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் K.சதாசிவம் தலைமை தாங்க, அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர். இரா.மகேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நினைவாற்றல் பயிற்சியாளர் அசன்ராஜா, மாணவர்களுக்கு நினைவற்றல் பயிற்சி அளிக்க போட்டி தேர்வு பற்றிய விழிப்புணர்வை அக்னி சிறகுகள் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெரோனிகா அளித்தனர்.

மேலும் போதை மற்றும் தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை அக்னி சிறகுகள் மனநல ஆலோசகர் ஹரிஹரன் MSW எடுத்துரைக்க நிறைவாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நன்றியுரை கூற பயிற்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வில் மேல்நிலை வகுப்பைச் சார்ந்த சுமார் 135 மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments