திமுக கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்வுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரையாற்றினார். தெற்கு மாவட்ட கழகச் செயலாளும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி உரையாற்றினார். பின்னர் இரத்த தானத்தை துவக்கி வைத்த எ.வ.வே.கம்பன் சிறப்புரையாற்றினார். கழக மருத்துவ அணி துணைத்தலைவர் முடிவில் நன்றியுரை தெரிவித்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வயதை குறிக்கும் குறிக்கும் விதமாக முகாமில் 47 நபர்கள் ரத்த தானம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           5
5                           
 
 
 
 
 
 
 
 

 15 December, 2024
 15 December, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments