கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்…. ஆதவ் அர்ஜீன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது நான் அது சுதந்திரமாக எடுத்த முடிவுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தான்.

ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும் மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பாஜக அரசு கொண்டுவர பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments