
Advertisement
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தும் வருகின்ற நாளை (01.02.2021) முதல் நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுதகவல்.

Advertisement
தமிழக முதலமைச்சர் ஆணைப்படி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.02.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
அது சமயம் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இக்குறைதீர் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் மனுதாரர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி ஆகியவற்றை தவறாது எடுத்து வரவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           31
31                           
 
 
 
 
 
 
 
 

 01 February, 2021
 01 February, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments