
Advertisement
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல பயணிகள் மற்றும் விமானத்தில் செல்வதற்கு தயாராகி வந்தனர். அப்போது காலை 8.45 மணியளவில் திடீரென விமான நிலைய மேலாளருக்கு அழைப்பு வந்தது. அதில் பெண் குரலில் விமான நிலையத்தில் பாம் போட்டுருவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement
உடனடியாக டெர்மினல் மேலாளர் சிஐஎஸ்எப் படையினருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, 200க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானத்திற்கு செல்லும் பயணிகளிடமும் தீவிர சோதனை மேற்கொண்டு பின் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement
மேலும் தீவிர சோதனைக்கு பிறகு விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியாகியது. மிரட்டல் விடுத்த பெண் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           211
211                           
 
 
 
 
 
 
 
 

 01 February, 2021
 01 February, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments