Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் குமரவேல் கூறுகையில்…. திருநெடுங்குளத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகளில் அவரின் கல்லீரலின் மேற்பகுதியில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதயம், நுரையீரல், மயக்கமருந்து நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் அளித்த லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் கல்லீரலின் வலது பக்கத்தில் இருந்த கட்டி 60 சதவீதம் கல்லீரலுடன் சேர்த்து அகற்றப்பட்டது. இதயம் வெளியேற்றும் ரத்தத்தில் 25% கல்லீரலுக்கு (1200 மிலி) செல்வதால் மிகவும் கவனத்துடன் நவீன கருவியை பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.

டீன் குமரவேல், மருத்துவ கண்காணிப்பாளர் உதயஅருணா, துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள் கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சையில் கல்லீரலின் மேற்பகுதியில் 1.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செரிமானத்திற்கு தேவையான ஹார்மோன், புரோட்டீன், ரத்த உறையும் காரணிகள், எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது, செரித்த உணவுகளை உறிஞ்சுவது, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளும் கல்லீரல் மனிதர்களின் ஒரு முக்கிய உறுப்பு என்பதால் அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.

வைரஸ் பாதிப்பு, அதிகமாக மது அருந்துவது, பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் கல்லீரல், உணவுக்குழுாய், கணையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை அகற்றும் சிகிச்சை திருச்சிஅரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *