திருவெறும்பூர் அருகே நியாய விலை கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
துவாக்குடி மலை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மனைவி அங்காள பரமேஸ்வரி (45) இவர் துவாக்குடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று துவாக்குடி பாரதியார் தெருவை சேர்ந்த செந்தில் மனைவி முத்தரசி (45 ) என்பவர் கடைக்கு வந்து தனக்கு வேண்டிய
பட்டவருக்கு பாமாயில் இல்லையா என கூறி அங்காள பரமேஸ்வரியிடம் தகராறு செய்ததோடு தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அங்காள பரமேஸ்வரி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தரசியை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments