Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறித்தவர்கள் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்து நடந்து சென்ற பெண் வங்கி ஊழியரிடம் பல்சர் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செயினை பறித்துச் சென்றது

சம்பந்தமாக வழக்கு பதிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌.செல்வநாகரத்தினம் IPSஅவர்கள் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் பனாவத் IPS அவர்கள் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள்

தலைமையில் தலைமை காவலர்கள் திரு.ஹரிஹரன் திரு. அருண் மொழிவர்மன், திரு.நல்லேந்திரன், திரு.ராஜேஷ் திரு.சதீஷ்குமார்,திரு.கணேசமூர்த்தி,திரு . நிர்மல் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினருக்கு கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து

குற்றவாளிகளை பின் தொடர்ந்து சென்று சம்பவத்தில் ஈடுபட்டது  மணிகண்டகுமார் பெரியார் நகர், வாழவந்தான் கோட்டை துவாக்குடி திருச்சி மற்றும் 17 வயது சிறார்  ஒருவர்  என்பதை கண்டறிந்து எதிரிகளை பிடித்து விசாரித்ததில் திருவெறும்பூர் கோகுல் நகர் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

 மேலும் கடலூர் மாவட்டம் புவனகிரி செயின் பறிப்பில் வண்டி ஓட்டியது மயிலாடுதுறையை சேர்ந்த டைட் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய விவரங்களை கூறியதில் புவனகிரி போலீசார் அவனை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லையில் கடந்த ஆண்டு காணாமல் போனது என தெரிய வந்தது.

மேற்கொண்ட குற்றவாளிகளிடமிருந்து வழக்கின் சொத்துக்கள் மீட்க பட்டு, இந்த நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்ட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கில் சேர்க்கப்பட்டு எதிரிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு

 குற்றவாளிகளை கண்டுபிடித்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிபடையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *