ஸ்ரீரங்கம், பஞ்சகரை ரோடு, யாத்திரி நிவாஸ் எதிரே ஹெலிபேட் அருகில் ராஜா , பரமத்திவேலூர், கரூர் மாவட்டம் என்பவர் ஸ்விப்ட் டிசையர் காரை ஓட்டி வந்த பொழுது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு கிரிக்கெட் விளையாட அமர்ந்திருந்த
திவாகரன் ஜெயபிரகாஷ் சம்பத் சேர்ந்தவர்கள் மீது மோதி, பின்பு கட்டுப்பாட்டை இழந்து கொள்ளிடம் ஆற்றில் கார் விழுந்தது. காயம்பட்ட ஜெயபிரகாஷ், திவாகரன் ஆகிய இரு நபர்களும் திருவானைக்கோவில் சுகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வாகனத்தை ஒட்டி வந்த ராஜா மற்றும் காரில் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments