காமராஜர் குறித்து பேசிய திருச்சி சிவா எம்.பி வீடு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் நேற்று அறிவித்திருந்தார்.இன்று(17.07.2025) திருச்சி நீதிமன்றம் வாயில் முன்பு உள்ள வ .உ .சி சிலை முன்னதாக இருந்து ஊர்வலமாக புறப்பட தயாராகினர். திமுக எம்பி பதவி விலக வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் திமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழப்பி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர்
ஊர்வலமாக சிவா எம்பி வீடு முற்றுகையிட காங்கிரஸ் தொண்டர்கள் கன்டோன்மென்ட் பகுதி சாலையில் சென்றனர்.
காவல்துறை தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் உங்களுக்கு இந்த போராட்டம் நடத்த அனுமதி கிடையாது தடையை மீறி போராட்டம் நடத்துகிறீர்கள் கைது செய்யப்படுவீர்கள் என குறிப்பிட்டனர் அதையும் தாண்டி ஊர்வலமாக சென்றதால் சிறிது தூரத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த போராட்டத்தினால்
நீதிமன்றம் கண்ட்டோன்மென்ட் பகுதி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாற்று சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
மாநில பொதுச் செயலாளர் சரவணன் சிவா எம்.பி காமராஜர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவராக இந்த கருத்தை பேசவில்லை. எங்களுக்கு சந்தேகமாய் இருக்கிறது.திமுக தலைமை சொல்லி இவர் பேசியிருப்பாரோ என்று எங்களுக்கு தோன்றுகிறது. இவருக்கு அவ்வளவு தைரியம் இல்லை. பொன்முடி அவதூறாக சர்ச்சையான கருத்துக்களை பேசியதற்கு கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்தது. அதேபோல் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காங்கிரசாரின் போராட்ட அறிவிப்பால் திருச்சி எம்.பி சிவா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் தற்பொழுது ஊரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments