திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலைக்கோவில், வ.உ.சி தெருவில் கடந்த ஏப்ரல் 10.ஆம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரவி இவரது மகன் கிரிட்டி (எ) கட்டையன் (எ) சாந்தகுமார்(21), பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி இவனது நண்பன் பட்டுக்கோட்டை
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த உமர் முகமது மகன் அஷரப் அலி,(19), பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குல தெருவை சேர்ந்த முருகன் மகன் கண்ணன்(21), மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் சேர்ந்து திருடியது சிறிய வந்தது அதன் அடிப்படையில் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுவன் சீர்திருத்த பள்ளிகளும் மற்றும் மூன்று பேர் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுசிறையில் உள்ளனர்.
இந்நிலையில் கிரிட்டி (எ) கட்டையன் (எ) சாந்தகுமார்(21), கண்ணன் (21), ஆகிய இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி கலெக்டர் சரவணன் தடுப்பு காவல் ஆணைநேற்று பிறப்பித்தார்.அதனை சிறையில் உள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 68 பேர் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments