வயல் வெளியில் மேய்கின்ற ஆடுகளை இதுவரை சுமார் 60 ஆடுகளுக்கு மேல் கடந்த ஒரு மாதத்திற்குள் வெறி நாய்கள் கடித்து குதறி கொன்று வந்தன.. தற்போது இன்று வேங்கூர் வடக்கு தெருவில் உள்ள தங்கையன் என்பவர்க்கு
சொந்தமாக வீட்டில் வளர்த்து வந்த ஆடுகள் ஈன்ற இளம் குட்டிகள் சுமார் 12 குட்டிகளை வெறிநாய்கள் கடித்து குதறி கொன்று விட்டு சென்றுள்ளன.. இந்த நாய்கள் தற்போது தெருக்களில் உலா வரத் தொடங்கிவிட்டன… சிறு பிள்ளைகள் தெருவில் கடைகளுக்கு, பள்ளிக்கு சென்றால் கூட நாய்கள் தினந்தோறும் துரத்தி வருகின்றன…
இன்று ஆடுகளின் உயிர் நாளை மனிதர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதை தடுக்க திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
வட்டாச்சியர் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments